காதலை எதிர்க்கிறார்கள்.. சங்கீதா

By Staff

Sangeetha
கங்கை அமரன் இயக்கி வெளிவராமலே போய்விட்ட பூஞ்சோலை படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக தனது கேரியரை ஆரம்பித்தவர் ரசிகா என்கிற சங்கீதா.

பின்னர் பாண்டியராஜன் ஜோடியாக கபடி கபடி படத்தில் நடித்தார். விக்ரம் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்திலும் முக்கிய வேடத்தில் வந்தார்.

உயிர் படத்தில் கொழுந்தனை மடக்கத் துடிக்கும் அண்ணி வேடத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமடைந்தார். சமீபத்தில் ரிலீசான தனம் படத்தில் தாசி வேடத்தில் கலக்கினார்.

சங்கீதாவும் ஒரு இளைஞரும் ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால் தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும், விரைவில் பெற்றோர் பார்க்கும் பையனை மணக்க விரும்புதாகவும் சங்கீதா கூறி வந்தார்.

இந்நிலையில் தான் இத்தனை நாள் மூடி வைத்திருந்த காதலை முதல் முறையாக அறிவித்து உள்ளார். காதலனின் பெற்றோர் நடிகையை திருமணம் செய்யக் கூடாது என்று காதலனுக்கு தடை போடுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

இது குறித்து சங்கீதா அளித்த பேட்டி:

நான் காதலிப்பதாகவும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசு கிசுக்கள் வந்தன. நான் ஒருவரைக் காதலிப்பது உண்மைதான். ஆனால் அவர் சினிமாவில் உள்ளவர் அல்ல. என்னை மிகவும் நேசிக்கிறார். ஆனால் எங்கள் உறவு இன்னும் காதல் என்ற அளவுக்குத்தான் உள்ளது. இன்னும் திருமணம் வரை போகவில்லை.

அவர் வீட்டில் எங்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள். நான் நடிகை என்பதால் திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். ஆனால் அவரது பெற்றோர் நிச்சயம் மனம் மாறுவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்றார் சங்கீதா.

ஆல் தி பெஸ்ட் சங்கீதா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X