அகம் புறம்... ஷெரீன் சோகம்!

வாய்ப்புகள் வராவிட்டாலும் பரவாயில்லை, வந்த வாய்ப்புகளும் கை நழுவிப் போவது அம்மணியை மீண்டும் பெங்களூருக்கே திரும்பி விடலாமா என யோசிக்க வைத்துள்ளது!
சமீபத்தில் அவர் நாயகியாக ஒப்பந்தமான படம் அகம் புறம். ஷாமுக்கு ஜோடியாக போட்டோ செஷனிலிலெல்லாம் உற்சாகமாகக் கலந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ்கள் கொடுத்தார்.
இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், இப்போது கீரத் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வேடத்தில்! காரணம் தயாரிப்பாளர் திருமலைக்கு, ஷெரீனை விட கீரத் ரொம்பப் பிடித்துப் போய்விட்டாராம்.
என்னாச்சுப்பா என்று ஷெரீனிடம் கேட்டால், அழுத முகமும், சிந்திய மூக்குமாக புலம்பித் தீர்த்து விட்டார் ...
எங்கிட்ட என்ன குறை... சொல்லாம கொள்ளாம என்னைப் படத்திலிருந்து தூக்கி அசிங்கப்படுத்தறார் அந்தத் தயாரிப்பாளர்.
இத்தனைக்கும் அவர்கள் சொன்ன மாதிரியெல்லாம் ஒத்துழைப்பு (?) கொடுத்தேன். கேட்ட தேதிகளெல்லாம் ஒதுக்கியிருந்தேன்... எனப் புலம்புகிறார்.
ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துக் கொண்டிருந்த வில் படமும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்த நிலையில் அகம் புறமும் 'அந்தர்' ஆகியுள்ளது.
இதனால், பேசாமல் பெங்களூர் திரும்பி விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார் ஷெரீன்!
நல்ல 'ரோசனை'தான்!


Click it and Unblock the Notifications











