»   »  ஷ்ரியா, இலியானாவின் 'விருந்து'

ஷ்ரியா, இலியானாவின் 'விருந்து'

Subscribe to Oneindia Tamil
Shreya with Prabhas
தெலுங்கில் ஷ்ரியாவும், இலியானாவும் இணைந்து கலக்கிய படம் தமிழில் வெற்றித் திருமகன் என்ற பெயரில் டப் ஆகி வெளி வருகிறது. படம் முழுக்க இரு நாயகிகளும் கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறார்களாம்.

தெலுங்கில் டாப் ஸ்டாராக இருப்பவர் இலியானா. தமிழைப் போலவே தெலுங்கிலும் பின்னி எடுக்கும் கிளாமரில் பிரமிக்க வைப்பவர் ஷ்ரியா. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் தற்போது வெற்றித் திருமகன் என்ற பெயரில் தமிழுக்கு வருகிறது.

பிரபாஸ்தான் நாயகன். படம் முழுக்க பிரபாஸின் அதிரடியும், ஷ்ரியா, இலியானாவின் கிளாமரும் கொடி கட்டிப் பறக்கிறதாம்.

பிரபாஸ் ஒரு பக்கம் அனல் பறக்க வசனமும், அடிதடியுமாக பட்டையைக் கிளப்ப, இலியானாவும், ஷ்ரியாவும் கிளாமரில் சூட்டைக் கிளப்பியுள்ளனராம்.

இதனால் படம் பார்ப்பவர்களுக்கு எதை பார்ப்பது, எதை விடுவது என்ற பெரும் குழப்பம் ஏற்படுவது உறுதி என்கிறது வெற்றித் திருமகன் பட வட்டாரம்.

இந்தக் கவர்ச்சிப் போட்டியில் ஸ்கோர் செய்திருப்பவர் இலியானாதானாம். காரணம், ஷ்ரியாவை விட ஒரு காட்சியில் அவர் கூடுதல் கிளாமர் காட்டியுள்ளாராம். அதாவது அது ஒரு குளியல் காட்சியாம். தெலுங்கு ரசிகர்களை இந்தக் காட்சிதான் ரொம்பக் கவர்ந்ததாம்.

படத்தில் பிரகாஷ் ராஜும் இருக்கிறார். இப்படத்தின் கதை கிட்டத்தட்ட மிஸ்டர் பாரத் படத்தின் கதையைப் போலவே இருக்கிறதாம்.

கதையைப் பற்றி யார் கவலைப்படப் போவது - இரு கவர்ச்சி கங்கைகள் பரவசப்படுத்த காத்திருக்கும்போது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil