அர்ஜூனுக்கு ஷ்ரியா ஸாரி!

வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் ஷ்ரியா மீளவில்லை. முன்னணி இளம் நடிகர்கள் எல்லாம் ஷ்ரியாவை பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனால் கைவசம் படங்கள் அதிகம் இல்லாத நிலையில் உள்ளார் ஷ்ரியா.
விக்ரமுடன் கந்தசாமி படத்தில் நடித்து வருகிறார். அதுவும் கூட நிறைவடையும் தருவாயை நெருங்கி விட்டது. இதுதவிர வேறு புதிய படம் எதுவும் இல்லை. சிம்புவுடன் ஒரு படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு சமீபத்தில் வந்தது. வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டுள்ளார் ஷ்ரியா.
இந்த நிலையில் ஷ்ரியாவின் மார்க்கெட் வறட்சியைப் பார்த்து சில மூத்த நடிகர்கள், ஷ்ரியாவுடன் ஜோடி சேர முயற்சி மேற்கொண்டுள்ளனராம். அதில் அர்ஜூன் தரப்பிலிருந்து அவருடன் ஜோடி சேர முடியுமா என்று கேட்டு சிலர் ஷ்ரியாவை அணுகியுள்ளனர்.
ஆனால் முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் ஷ்ரியா. எனக்கு வயதாகி விடவில்லை. இளம் நடிகர்களுடன் நடிக்கும் வயதுக்குள்தான் இருக்கிறேன். அர்ஜூனுடன் இணைந்து நடித்தால் எனது மார்க்கெட் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்று காரணம் கூறுகிறாராம் ஷ்ரியா.


Click it and Unblock the Notifications











