அதிமுகவுக்கு இந்த ஆண்டும் பிரச்சாரம் செய்வாரா சிம்ரன்?

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். கமல் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று தஞ்சையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு சிம்ரன் அளித்த பதில்களும்:
இப்போது எத்தனை படங்களில் நடித்து வருகிறீர்கள்?
எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக கூறியிருந்தீர்களே?
திரைப்படங்கள் தயாரிக்கும் எண்ணமே எனக்கில்லை.
திரைப்படம் இயக்குவீர்களா?
வருங்காலத்தில் சின்னத்திரையில் தயாரிப்பு பணிகள் மற்றும் நடிப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. அவற்றை வேண்டுமானால் இயக்கக் கூடும். ஆனால் சினிமா இயக்குவது பற்றி எதுவும் திட்டமில்லை.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டீர்கள். தற்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
கண்டிப்பாக 100 சதவீதம் அரசியலுக்கு வரமாட்டேன். நல்ல குடும்ப தலைவியாக இருந்து வருகிறேன், என்றார்.


Click it and Unblock the Notifications











