மைசூர் சென்றபோது சாலையில் மயங்கி விழுந்தார் சோனா – காலில் காயம்

By Sudha

Sona
பெங்களூரிலிருந்து மைசூருக்குக் காரில் சென்ற கவர்ச்சி நடிகை சோனா, வழியில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கியபோது மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதில் அவரது இரு கால்களிலும் பலத்த அடிபட்டு விட்டதாம்.

கவர்ச்சி நடிகை சோனா தற்போது சொந்தமாக படம் எடுத்து வருகிறார். 2010 பாக்யராஜ் என்ற பெயரில் அவர் இயக்கி வரும் படம் வளர்ந்து வருகிறது.

படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர்களை அழைத்துக் கொண்டு பெங்களூரில் முகாமிட்டார் சோனா. பின்னர் அவர்களுடன் மைசூருக்குக் கிளம்பினார்.

காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். அப்போது திடீரென மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டாராம். சாலையில் விழுந்ததில் அவருக்கு தலையிலும், 2 கால்களிலும் காயம் ஏற்பட்டு விட்டதாம்.

உடனடியாக உதவியாளர்கள் அவரைத் தூக்கிச் சென்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போய்க் கொண்டிருந்த காரை ஏன் சோனா நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார், எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X