'ப்யூட்டிபுல்' சோனம் கபூர் அழகின் ரகசியம் 'பெரியம்மா' ஸ்ரீதேவி?
பாலிவுட்டில், 'போல்ட் அன்டு ப்யூட்டிபுல்' என்று புகழப்படும் சோனம் கபூர் தனது முதல் படத்திலேயே அட்டகாசமான அழகினாலும், நடிப்புத்திறமையாலும் அனைவரையும் கவர்ந்தவர்.
இந்த நிலையில் தனது உடை, மேக்அப், என அனைத்திலுமே பெர்பெக்ட் என்று பெயர் எடுக்க தனது பெரியம்மா ஸ்ரீதேவிதான் காரணம் என்று ரகசியத்தை கூறியுள்ளார் சோனம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சினிமாவில் எப்படி மேக்அப் போடவேண்டும். எந்த காட்சிக்கு என்னமாதிரியான உடைகள் போடவேண்டும் என்றெல்லாம் ஸ்ரீ பெரியம்மாதான் ஆலோசனை கூறுவார். அவரது அறிவுரைகளை பின்பற்றியதாலேயே நான் நடித்த திரைப்படங்களில் என்னுடைய உடை அலங்காரம் சிறப்பாக பேசப்பட்டது என்றம் அவர் கூறியுள்ளார். சின்ன சின்ன குறைகளை கூட நுணுக்கமாக கவனித்து ஸ்ரீதேவி ஆலோசனை தெரிவிப்பார் என்றும் சோனம் கபூர் கூறியுள்ளார்.
பாலிவுட் மற்றும் கோலிவுட் பட உலகின் நேற்றைய கனவுக்கன்னியாக திகழ்ந்தவராச்சே ஸ்ரீ தேவி, சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
Comments


Click it and Unblock the Notifications
