'தம்பி' படத்தில் தமன்னா?

வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவரான தம்பி. ராமையா, இயக்கிய முதல் படம்தான் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். முதல் படம் தோல்விப் பட வரிசையில் சேர்ந்ததால், சற்றே அமைதி காத்து வந்த தம்பி அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார்.
அடுத்த படத்திற்கு ஒரு கூடை முத்தம் 100 ரூபாய் என பெயரிட்டுள்ளார். இப்படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தமன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர்கூறுகையில், இந்தப் படம் தொடர்பாக என்னை யாருமே அணுகவில்லை. யார் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போதைக்கு நான் ஐந்து படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழில் சூர்யாவுடன் அயன், தனுஷுடன் படிக்காதவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். ஆனந்த தாண்டவம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.இதுதவிர தமிழில் வேறு எந்தப் படத்தையும் நான் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை என்றார் தமன்னா.
தெலுங்கில் கொஞ்சம் இஷ்தம்கா, கொஞ்சம் கஷ்தம்கா என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் தமன்னா.
தம்பிண்ணா, தம்பிண்ணா உங்க படத்துல தமன்னா இல்லையாண்ணா?


Click it and Unblock the Notifications











