தமன்னா வயசு 20!

13 வயதிலேயே நடிக்க வந்தவர் தமன்னா. சாந்த் கா ரோஷன் செஹ்ரா என்ற இந்திப் படம்தான் இந்த மராட்டிய அழகி நடித்த முதல் சினிமா.
கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 15 வயதுதானாம். கோடம்பாக்கத்தின் மிக இளம் வயது ஹீரோயின் என்ற பெருமை இவருக்கு உண்டு.
கேடி படம் ஓடாவிட்டாலும், தமன்னாவுக்கு தெலுங்கு திரையுலகம் கை கொடுத்தது. அங்கு இவர் நடித்த ஹேப்பி டேஸ் செம பிக்கப்பாகிவிட, படத்தின் தலைப்பிலிருந்த மகிழ்ச்சி இவர் கேரியரிலும் தொற்றிக் கொண்டது.
அந்த நேரம் பார்த்து, பாலாஜி சக்திவேலின் கல்லூரி பட வாய்ப்பு வர, தனக்கும் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்தார் இந்தப் படத்தில்.
அதன் பிறகு வந்த அயன், படிக்காதவன் படங்களின் வெற்றி தமன்னாவை இன்று கமலுக்கு ஜோடியாக்கும் அளவு தூக்கிவிட்டுள்ளது.
இன்று ரூ 1 கோடிக்கு மேல் சம்பளம், பெரிய நடிகர்களே கேட்டாலும் தரமுடியாத அளவு பிஸியான கால்ஷீட் ஷெட்யூல் என தமன்னா காட்டில் பேய் மழை.
இன்று இருபதாவது பிறந்தநாள் கொண்டாடும் தமன்னாவுக்கு, இனி வரவிருப்பதெல்லாம் பெரிய படங்கள்.
கார்த்தியுடன் பையா, விஜய்யுடன் சுறா, கமல்ஹாஸனுடன் ரவிக்குமார் இயக்கும் புதுப் படம்...
வாழ்த்துக்கள் தமன்னா!


Click it and Unblock the Notifications











