த்ரிஷா சம்பளம் ரூ.1 கோடி!

By Staff

Trisha with Vikram
யார் நன்றாக நடிப்பது என்ற போட்டியைவிட, யார் அதிக சம்பளம் பெறுவது என்ற போட்டிதான் அனைத்து மொழி சினிமாவிலும் இன்றைக்கு. குறிப்பாக நடிகைகள் மத்தியில். காரணம் அதிகபட்சம் அவர்கள் உச்சத்திலிருக்கும் காலம் ஒரு சில ஆண்டுகள்தான் என்பதால்.

தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் வாங்குவதில் முதலிடம் யாருக்கு என்பதில் நயன்தாரா-த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதற்காக இருவரும் ஒருவருடைய வாய்ப்பை இன்னொருவர் தட்டி பறிக்கவும் தயங்குவதில்லை என்கிறார்கள். குருவி படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஆனால் எப்படியோ கடைசியில் த்ரிஷாவுக்கு கைமாறியது.

வில்லு படத்தில் த்ரிஷா வை நடிக்க விடாமல் நயன்தாரா தட்டிப் பறித்தார். இதனால் இருவருக்குள்ளேயேயும் பனிப்போர் நடந்து வருகிறது.

'பையா' படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டது. இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் தமிழ் நடிகையாக உயர்ந்தார். ஆனால் படப்பிடிப்பு துவங்கும் போது சம்பளத்தொகையை குறைக்குமாறு தயாரிப்பாளர் தரப்பில் கேட்டுக் கொள்ளபட்டதால் அப்படத்தில் இருந்து விலகினார்.

நயன்தாராவுக்கு பதில் பையா படத்தில் நடிக்க த்ரிஷா விரும்பினார். ஆனால் தயாரிப்பாளர் கேட்ட அளவு கால்ஷீட் இல்லாததால் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும் சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்ச வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது.

தெலுங்கு படமொன்றில் கோபிசந்த் ஜோடியாக நடிக்க ரூ. 1 கோடியே 10 லட்சம் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகார்ஜூனாவுடன் த்ரிஷா நடித்த கிங்' தெலுங்கு படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிகுவித்தது. இதையடுத்து தெலுங்கு திரையுலகில் அவரது மார்க்கெட் கொடிகட்டிப் பறக்கிறது இப்போது. இதையடுத்து சம்பளத்தை நயன்தாராவுக்கு நிகராக உயர்த்தியுள்ளார்.

த்ரிஷா அப்பா சத்யராஜ்:

இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடிப்பவர் சத்யராஜ். அபியும் நானும் படத்தில் பிரகாஷ்ராஜ் மகளாக த்ரிஷா நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே இந்தப் படமும் பெரிய அளவு பேசப்படும் என நம்புகிறார்கள்.

கண்டிப்பாக இந்தப் படத்தை தமிழில் ரிலீஸ் பண்ணக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சத்யராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X