பலா மரமும் பாவனா வீடும்!

கேரளத்து நாயகிகளில் ஒருவரான பாவனாவுக்கு திருச்சூர்தான் சொந்த ஊர். அங்கு சமீபத்தில் புதிய பங்களா வீட்டில் குடியேறியுள்ளார். இந்த வீட்டில் ஏகப்பட்ட பலா மரங்களாம். இதனால் மரம், செடி, கொடிப் பிரியையான பாவனாவுக்கு ஜாலியாகி விட்டதாம்.
பழைய வீட்டிலும் கூட ஏகப்பட்ட மரங்கள் இருந்ததாம். ஆனால் அதை விட்டுப் பிரிகிறோமே என்ற வருத்தத்தில் இருந்தவருக்கு இப்போது பலா மரங்களுக்கு மத்தியில் அமைந்த பங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
இதை விட முக்கியமான விஷயம், பலாப் பழத்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட ஐட்டங்களை செய்வதில் பாவனாவின் தாயார் எக்ஸ்பர்ட்டாம். இப்போது பலா மரங்களுக்கு நடுவிலேயே குடித்தனத்தை ஆரம்பித்துள்ளதால் தினசரி விதம் விதமான பலாப்பழ உணவு வகைகளை செய்து அசத்துகிறாராம்.
பலாப்பழக பாயாசம் அதில் குறிப்பிடத்தக்க ஐட்டமாம். இதுதவிர பஜ்ஜி, சிப்ஸ் போன்றவற்றையும் பலாப்பழத்தில் செய்கிறாராம் பாவனாவின் அம்மா.


Click it and Unblock the Notifications











