ஜெனிலியாவின் 'களரி'ச் சண்டை!

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடிப்பது கை வந்த கலைதான். அந்தக் கலையில் பிஎச்டி வாங்கியவர் போலாகி விட்டார் ஜெனிலியா.
தமிழ், இந்தி, தமிழ் என பிசியாக இருக்கும் ஜெனிலியாவுக்கு மலையாளத்திலும் நடிக்க நேரம் கிடைத்துள்ளது. விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வரும் ஜெனிலியா, உத்தமபுத்திரன் என்ற படத்தையும் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ள உருமி என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவர் களரிச் சண்டை போட வேண்டியது போல காட்சிகள் உள்ளதாம். இதற்காக அதைக் கற்கப் போகிறாராம் ஜெனிலியா.
முழுக்க முழுக்க களரி குறித்த படமாம் இது. அவார்டுக்காக என்று சொல்லி விட்டே எடுக்கிறார் சந்தோஷ் சிவன். படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறாராம். அவருக்கும் களரி தெரியாதாம். இதனால் இருவரையும் சேர்த்து வைத்து டிரெய்னிங் கொடுக்கப் போகிறார்களாம்.
தமிழில் கரகாட்டக்காரி வேடம் கிடைத்தால் கரகம் கத்துக்குவீங்களா ஜெனி?


Click it and Unblock the Notifications











