குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது - சுஷ்மிதா சென்

சுஷ்மிதாவுக்கு தற்போது 34 வயதாகிறது. ஏற்கனவே 2000மாவது ஆண்டு ரெனி என்ற குழந்தையை தத்தெடுத்தார். பின்னர் இந்த ஆண்டு அலிஷா என்ற 3 மாதக் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் சில குழந்தைகளை தத்தெடுக்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தானே சொந்தமாக குழந்தை பெற்றெடுக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் சுஷ்மிதா.
இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில், எனக்குள் குழந்தை ஆசை வந்து விட்டது. அதற்கான மணி அடிக்க ஆரம்பித்து விட்டதை உணர்ந்துள்ளேன். நானே குழந்தை பெற்றுக் கொண்டு அதை வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
அதற்குப் பிறகு மேலும் பல குழந்தைகளை தத்தெடுக்க தீர்மானித்துள்ளேன் என்றார் சுஷ்மிதா.
குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ள சுஷ்மிதா யார் மூலம் அதை நிறைவேற்றப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவில்லை.
சுஷ்மிதாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது உபரித் தகவல்.


Click it and Unblock the Notifications











