அமீஷாவின் 'அலேக்' ஆட்டம்

யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. தோடா பியர் தோடா மேஜிக் படத்தின் நாயகன் சைஃப் அலி கான்.
இப்படத்தில் கானுடன் இணைந்து லேஸி லம்ஹே என்ற பாட்டுக்கு வரலாறு காணாத அளவுக்கு கிளாமர் காட்டியுள்ளாராம். இந்தப் பாட்டுக்கு நான் அணிந்துள்ள உடை, இதுவரை நான் அணிந்திராதது, கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட அதில்ஆடியுள்ளேன் என்று தனது வாயாலேயே கூறியுள்ளார் அமீஷா.
அவ்வளவு கவர்ச்சியாகவா அப்பாட்டில் தோன்றுகிறீர்கள் என்று ஆச்சரியரப்பட்டு கேட்டால், ஆமாம், உண்மையிலேயே நான் மிகவும் கவர்ச்சியாகத்தான் ஆடியுள்ளேன். முதல் முறையாக நான் கவர்ச்சிகரமாக ஆடியுள்ளேன்.
அப்பாடலில் நான் அழகாக இருக்கிறேனோ இல்லையோ, நிச்சயமாக கவர்ச்சிகரமாக இருக்கிறேன். நிச்சயம் அனைவரும் என்னை இப்பாடலில் ரசிப்பார்கள்.
படத்திற்கு இந்தப் பாடல் முக்கியமானது. திருப்புமுனைப் பாடல். இதுவரை என்னிடம் காணாத கவர்ச்சியை இப்பாடலில் ரசிகர்கள் காண்பார்கள். அந்த அளவுக்கு என்னை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளேன்.
படத்தில் நான் மலாய்க்கா என்கிற கேரக்டரில் தோன்றுகிறேன். சோஹா அலிகான், கரீனா கபூர் போன்றோர் முழு நீள கவர்ச்சிப் போட்டியில் இறங்கியிருப்பதால் நானும் கவர்ச்சி கோதாவில் இறங்கியிருப்பதாக கூற முடியாது. கேரக்டருக்குத் தேவைப்பட்டதால் நான் கவர்ச்சி காட்டி நடித்துள்ளேன் என்கிறார் அமீஷா.
இப்படத்தில் ராணி முகர்ஜியும் இருக்கிறார். ஆனால் அமீஷாவின் கவர்ச்சி அனைவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் இருக்குமாம்.
அமீஷாவே புளகாங்கிதப்பட்டு கூறுவதைப் பார்த்தால் 'ரொம்பத்தான்' இருக்கும் போலிருக்கே!


Click it and Unblock the Notifications











