புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க மறுத்த அனுஷ்கா!
பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீடு அல்லது பத்திரிகையாளர் சந்திப்புக்கு படத்தின் ஹீரோயின்கள் வரும்போது, புகைப்படக்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு மொய்ப்பார்கள். படமாக எடுத்துத் தள்ளுவார்கள்.
நடிகைகளும் நிலைமையைப் புரிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுப்பார்கள். இலவச பப்ளிசிட்டிதானே...
ஆனால் அனுஷ்கா இந்த விஷயத்தில் ரொம்பவே கெடுபிடியாக நடந்து கொள்கிறாராம்.
சென்னையில் நேற்று நடந்த ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்காவை, நிகழ்ச்சி முடிந்ததும் வழக்கம்போல சூழ்ந்து கொண்டனர் பத்திரிகை புகைப்படக்காரர்கள்.
ஆனால் அவரோ, ஒரு நிமிடம் கூட நிற்கவில்லையாம். அத்துடன் போஸ் கொடுக்கவும் மறுத்துவிட்டு, விடு விடுவென காரிலேற கிளம்பினாராம். அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய ஒரு புகைப்படக்காரர், படமெடுக்க அனுமதி கேட்டாராம். பொதுவாக நான் யாருக்கும் போஸ் கொடுப்பதில்லை. இன்று எனக்கு அதற்கு மூடும் இல்லை என்று கடுகடுத்த முகத்துடன் கூறி, போய்விட்டாராம்!


Click it and Unblock the Notifications











