அமோக விற்பனையில் ஆசின் படம்!

இதோ இப்போது இன்னொரு மெகா விற்பனைச் செய்தி..
கஜினியாவது பரவாயில்லை, கிட்டத்தட்ட படமெடுத்து முடிந்தபிறகு விற்பனையானது. இப்போது ஆசின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள புதிய இந்திப் படமான தி லண்டன் ட்ரீம்ஸ், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரூ.120 கோடிக்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது.
செயற்கை கோள் மூலமான ஒளிபரப்பு, தியேட்டர்களில் ஒளிபரப்புவது, வீடியோ மற்றும் ஆடியோ, ரிங்டோன் உரிமைகள் என அனைத்தும் இதில் அடங்கும்.
ஆசினுக்காக இந்த விற்பனை என்று சொல்ல முடியாது. காரணம் இந்தப் படத்தில் சல்மான் கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருபெரும் நடிகர்கள் நடிக்கிறார்கள். ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்த ஹம் தில்தே சுக்கே சனம் வசூலில் சக்கைப் போடு போட்டது. விருதுகளையும் குவித்தது.
லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் லண்டனில் எடுக்கப்படுகின்றன. விபுல் ஷாவின் சமீபத்திய படமான சிங் இஸ் கிங், வசூவில் புதிய சாதனை படைத்துக் கொண்டிருப்பதால், இந்தப் படத்தையும் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
நான் நடிக்கும் படம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது. ஒரே பிரமிப்பாக உள்ளது. அதே நேரம் எனக்காகத்தான் இந்த வியாபாரம் எனக்காகத்தான் இவ்வளவு பெரிய தொகைக்கு இந்தப் படம் விற்பனையானது என்றெல்லாம் நான் கூறமாட்டேன். ஆனால் இப்படி ஒரு படத்தில் என்பங்கும் இனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் ஆசின்.
அப்ப... நிரந்தமா இனி மும்பை வாசம்தான்னு சொல்லுங்க!


Click it and Unblock the Notifications











