சின்னத் திரையில் சாயா சிங்!

திருடா திருடியில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் சாயா சிங். தொடர்ந்து நிறையப் படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் சரியாகப் போகாததால், இவர் காணாமல் போனார்.
கடைசியாக அவர் நடித்த தமிழ்ப் படம் அனந்தபுரத்து வீடு. இந்தப் படமும் தோல்வியடைந்தது.
இப்போது, மெகா சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் தொடர் நாகம்மா. சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த மாயாஜாலத் தொடரில் நாகம்மாவாக நடிக்கிறார் சாயா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "டிவி சீரியல்களில் நடிக்க திட்டமிட்டிருந்தது உண்மைதான். ஆனால் இத்தனை சீக்கிரம் நடிக்க வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்றாலும், நாகம்மா தொடரின் கதை அற்புதமாக உள்ளது. அதனால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்," என்றார்.
பெங்காலி மற்றும் ஒரிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறாராம் சாயா சிங். அதுமட்டுமல்ல, பெங்காலியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறாராம்!


Click it and Unblock the Notifications











