பாலா படத்தில் மீண்டும் லைலா!

By Sudha

Laila
இயக்குநர் பாலாவின் படம் மூலம் பெரும் உயர்வைக் கண்ட நடிகை லைலா மீண்டும் நடிக்க விருகிறார்- பாலா படத்திற்காக.

தமிழ் சினிமா நாயகிகளில் மறக்க முடியாதவர் லைலா. இவரது அழகே அந்த அழகான சிரிப்புதான். கன்னத்தில் குழி விழும் சிரிப்பைக் கொண்ட லைலா, கள்ளழகர் படம் மூலம் நடிகையாக வந்தவர். பாலாவின் நந்தா படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து பிதாமகனிலும் அட்டகாசமான ரோலில் நடித்தார்.

பின்னர் திருமணமாகிப் போய் விட்டார். லைலாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு லைலாவின் குழந்தைத்தனமான முகம் இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்துபோகவில்லை.

இந்த நிலையில் லைலா மீண்டும் நடிக்க வருகிறாராம். அதுவும் பாலா படத்திற்காக. பாலாவே, லைலாவைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தனது அவன் இவன் படத்தில் நடிக்குமாறு அவரே லைலாவை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாலா படம் என்பதால் லைலாவும் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம். இருப்பினும் இந்தப் படத்தில் நடித்து முடிக்கும் வரை வேறு படத்தில் நடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம் பாலா.

அவன் இவன் படத்தில் ஏற்கனவே சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இப்போது லைலாவும் இணைந்திருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X