மீண்டும் வருகிறார் ஜோ.?

ஜோதிகா நடிப்பை விட்டு விலகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகி விட்டது. மொழி படத்தோடு அவர் பிரியா விடை கொடுத்து விட்டார். திருமணத்திற்குப் பிறகு அன்புள்ள அம்மாவாக தனது மகளோடும், கணவர் சூர்யா குடும்பத்தோடும் நிம்மதியாக இருக்கிறார்.
ஆனாலும் ஜோதிகாவின் ரசிகர்கள் இன்னும் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அப்படிப்பட்ட ஜோதிகா ரசிகர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில், அவர் நடிக்கத் திரும்பி வரலாம் என்ற தகவலைக் கூறி குஷி ஏற்படுத்தியுள்ளார் சூர்யா.
ஜோதிகா மீண்டும் நடிக்க வருவாரா என்ற கேள்விக்கு சூர்யா பதிலளிக்கையில், அது அவருடைய விருப்பம். அதில் நான் தலையிட முடியாது. அவர் என்ன நினைக்கிறாரோ அதை அவர் செய்யலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு என்று கூறிய சூர்யா, தொடர்ந்து ஜோதிகா நடிக்க வரக் கூடும் என்பதையும் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதுகுறித்து சூர்யா கூறுகையில், உங்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளோம். அவர் மீண்டும் நடிக்க வந்தால் அது சாதாரணமாக இருக்காது. பிரமாண்டமான மறு வருகையாக இருக்கும். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியாது. அப்படி நடந்தால் அது பெரிய அளவில் இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.
ஜோ.வை ஜோராக வரவேற்க ரசிகர்கள் தயார்!


Click it and Unblock the Notifications











