தீபாவின் செல்லச் சிணுங்கல்!

By Staff

Deepa Chari
என்னைப் பார்த்து ஏதோ இந்திக்காரினு நினைச்சு ஒதுக்கிடாதீங்க.. நான் உங்க பக்கத்து ஊர்க்காரியாக்கும், என செல்லமாய் சிணுங்குகிறார் தீபா சாரி.

பலம் படத்தில், தன் கவர்ச்சி பலத்தைப் பிரயோகிக்க வரும் இந்த மும்பைப் பொண்ணு, நமீதாவை விட நன்றாகவே தமிழ்ப் பேசுகிறார்!

மும்பையில் மாடலிங் பண்ணிக் கொண்ட்டிருந்தவரை நடிப்புத் துறைக்கு அழைத்து வந்தவர் அவரது அக்கா கணவர்தானாம்.

நான் நடித்த முதல்படம் கபூதர். கிராமத்துப் பெண் வேடம். நன்றாகச் செய்திருந்தேன் நிறையப் பேர் பாராட்டினார்கள். இந்தப் படம் நிறைய விருதுகள் வாங்கினாலும், கலைப் படம் என்பதால் பெரிதாக ரசிகர்களைப் போய்ச் சேரவில்லை.

தமிழ், தெலுங்குப் படங்கள்தான் பெரிய அளவில் பேசப்படுகின்றன நானும் ஒரு நல்ல வாய்ப்புக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பலம் பட வாய்ப்புக் கிடைத்தது, என்கிறார் தீபா தெளிவாக.

பெயரைப் பார்த்து ஏதோ இந்திக்காரப் பொண்ணுன்னு நினைக்காதீங்க. நானும் உங்க ஊர்க்காரிதான். கொஞ்சம் பக்கத்து ஊர், மங்களூர். அதனால் என்னையும் இந்த்த் துறையில் ஆளாக்கிவிடுங்க, என தமிழில் செல்லமாய் சிணுங்குகிறார் தீபா. பல்ஸ் தெரிஞ்ச பார்ட்டி!

பார்வை ஒன்றே போதுமே பட இயக்குநர் முரளிகிருஷ்ணா பல வருட இடைவெளிக்குப் பிறகு தனது பலத்தைக் காட்ட வருகிறார்.

அதே போல, பிரபல பிஆர்ஓ ஜான்சனின் உதவியாளராய் இருந்து, பின்னர் பத்திரிகையாளராய் மாறிய சக்தி முதல்முறையாக ஒரு மக்கள் தொடர்பாளராய் பலம் காட்டக் களமிறங்கியிருக்கிறார்.

நல்லா பலம் காட்டுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X