காம்னாவின் 'ஓவர்டேக்'!

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படம் ராஜாதிராஜா. படத்தில் பார்ட்டிக்கு 6 ஜோடிகள். இதனால் படத்தில் ஜிலுஜிலுப்பு காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் வகை தொகையாக வந்திருக்கிறதாம்.
அதிலும் காம்னாவின் கவர்ச்சி ஏ கிளாஸில் வந்திருக்கிறதாம். ஆறு நாயகிகள் என்பதால் தான் எங்கே காணாமல் போய் விடுவோமோ என்ற பயத்தில் கேட்டதை விட கூட்டிக் கொடுத்து கலக்கியிருக்கிறாராம் காம்னா.
அதிலும் லாரன்ஸுடன் அவர் போட்டுள்ள ஒரு குத்துப் பாட்டு படு அமோகமாக வந்திருக்கிறதாம். இந்த ஒத்தப் பாட்டின் மூலம் அத்தனை நாயகிகளையும் ஓவர்டேக் செய்து விட்டார் காம்னா என்கிறார்கள்.
படம் முழுக்க நாயகிகள் கூட்டம் அலை மோதுவதால், கவர்ச்சி காமக் குவியலாக மாறி விடப் போகிறதே என்ற பயத்தில் எடுத்த வரை போட்டுப் பார்த்து கவர்ச்சிக்கு லிமிட் வைத்துள்ளாராம் இயக்குநர்.
இருந்தாலும் அதையும் மீறி காம்னாவின் கவர்ச்சி சிறப்பாக வந்திருப்பதால் இருக்கட்டுமே என்று விட்டு வைத்துள்ளார்களாம்.
சென்சார் 'சிஸர்ஸ்' விட்டு வைக்குமா இந்த கவர்ச்சி சிக்சரை?


Click it and Unblock the Notifications











