காத்திருக்கும் கரீஷ்மா

பாலிவுட்டில் ஒரு காலத்தில் புயல் என கலக்கியவர் கரீஷ்மா கபூர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிய பின்னர் சினிமா பக்கம் திரும்பவில்லை கரீஷ்மா. ஆனால் அவரது தங்கை கரீனா கபூர், கரீஷ்மாவை விட இரண்டு மடங்கு அதிக அலையைப் பரப்பினார்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வர திட்டமிட்டுள்ளார் கரீஷ்மா. நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல கதை வேண்டும். அது என்னை திருப்திப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் நடிக்க வருவேன்.
என்னை திருப்திப்படுத்தக் கூடிய அப்படிப்பட்ட நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.
வயது முக்கியமல்ல. நடிப்புதான் முக்கியம். எனக்கு நடிக்க தெரியும். எனவே மீ்ண்டும் பாலிவுட்டில் பிரகாசிக்க முடியும் என நம்புகிறேன் என்றார் கரீஷ்மா.
கரீஷ்மா தற்போது நச் பாலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











