ஐஸ்வர்யா ராய்க்கு நிகராக கேத்ரீனா!

By Staff

Katrina Kaif
சம்பளத்திலும் சரி, புகழிலும் சரி ஐஸ்வர்யா ராய், கரீனா கபூருக்கு அடுத்து பாலிவுட்டில் கொடிகட்டிப் பறப்பது கேத்ரீனா கைஃப்தான்.

யுடிவி நிறுவனம் தனது அடுத்த இரண்டு படங்களுக்கு கேத்ரீனாவைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளது. சம்பளம் எவ்வளவு தெரியுமா... 7 கோடி ரூபாயாம்!

பாலிவுட்டில், முன்னிலையில் இருந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய். அவருக்கு அடுத்து கரீனா கபூருக்குத்தான் ஏக மவுசு.

இப்போது, இவர்களுக்குப் போட்டியாக கேத்ரீனாவும் விஸ்வரூபம் எடுத்துள்ளார், தனது தொடர் வெற்றிகள் மூலம். 2006ம் ஆண்டிலிருந்து, நமஸ்தே லண்டன், அப்னே, பார்ட்னர், வெல்கம், ரேஸ், சிங் இஸ் கிங் என இவர் நடித்த ஆறு படங்கள் தொடர்ந்து வெற்றி சூப்பர் டூப்பர் ஹிட்களாக அமைந்துவிட்டன.

இந்த வெற்றிகள் மூலம் கேத்ரீனாவுக்கென்று ஒரு தனி இமேஜ் உருவாகிவிட்டதால், ஐஸ்வர்யாவை நெருங்க முடியாதவர்கள் கூட கேத்ரீனா பக்கம் போய்விடுகிறார்கள்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் படத் தயாரிப்பில் இறங்கிய ஸ்டுடியோ 18, ரூ.6 கோடி கொடுத்து கேத்ரீனாவை ஒப்பந்தம் செய்தது. இப்போது அதே ரூட்டில் ரூ.7 கோடி கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளது யுடிவி.

இந்த புதிய அந்தஸ்து குறித்து என்ன நினைக்கிறார் கேத்ரீனா?

'எனக்கு பணம் முக்கியமில்லை; ஐஸ்வர்யா ராய், கரீனா கபூருக்கு இணையாக வைத்து நான் பேசப்படுவதே எனக்குப் பெருமையாக உள்ளது' என்கிறார் கேத்ரீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X