படேகருக்கு 'ஜட்டி' பரிசளித்த காத்ரீனா!

Katrina
நானா படேகருக்கு பழைய இத்துப் போன ஜட்டிகள், பிய்ந்த செருப்பு மற்றும் ஒரு செயற்கை மீசை ஆகியவை அடங்கிய பரிசை அளித்தாராம் காத்ரீனா கைப்.

சீரியஸாக அல்ல - அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால் ஆகியோரின் குறும்புத்தனத்தால்.

ராஜ்நீதி படத்தில் நடித்து வருகிறார் காத்ரீனா கைப். படத்தில் நானா படேகர், அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்புத் தளத்தில், காத்ரீனாவை எப்படியாவது ஏமாற்றுவது என்று முடிவு செய்தனர் தேவ்கன், ராம்பால் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர்.

இந்த மும்மூர்த்திகள் ஒரு பெட்டியில் பழைய ஜட்டிகள், ஒரு பிய்ந்து போன செருப்பு, பொய் மீசை ஆகியவற்ற வைத்து கிப்ட் பார்சல் போல கட்டி காத்ரீனாவிடம் சென்றனர்.

இன்று நானா படேகரின் பிறந்த நாள். ஆனால் அவர் அப்செட்டாக இருக்கிறார். இந்தப் பரிசை நீங்கள் போய் கொடுத்து வாய் குளிர வாழ்த்தினால், மனம் குளிர அவர் கூல் ஆகி விடுவார் என்று கதை விட்டுள்ளனர்.

சந்தோஷித்துப் போன காத்ரீனா, ரியல்லி என்று ஆச்சரியத்துடன் கேட்டபடி ஆர்வமாக அந்த பார்சலை வாங்கிக் கொண்டு படேகரிடம் போயுள்ளார்.

படேகரின் கையைப் பிடித்துக் குலுக்கி பார்சலைக் கொடுத்தார். அடடே என்று ஆச்சரியத்துடன் அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்த படேகர் டென்ஷனாகி விட்டார். ஏன் டென்ஷனாகிறார் என்று புரியாமல், பார்சலை வாங்கிப் பார்த்த காத்ரீனா பீதியாகி விட்டார்.

என்ன நடந்தது என்பது அவருக்குப் புரியவில்லை. ஆனால் படேகருக்குப் புரிந்து விட்டது. இந்த கூத்தை அருகில் இருந்து பார்த்த அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் விழுந்து விழுந்து சிரிக்கவே அப்போதுதான் புரிந்ததாம் காத்ரீனாவுக்கு.

அவரை அமைதிப்படுத்திய படேகர், இனிமே இந்தப் பசங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரும்மா என்று சிரித்தபடி கூறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X