ஹோம்லி ரோல்களை விரும்பும் லஷ்மி ராய்

கற்க கசடற மூலம் நடிக்க வந்த லஷ்மி ராய், நடிப்பைக் கற்றாரோ இல்லையோ, கிளாமரை கசடறக் கற்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.
லஷ்மி ராய் நடிக்கும் படம் என்றால் கண்டிப்பாக கிளாமர் இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகி விட்டது. ஆனால் லஷ்மியோ, இப்படியெல்லாம் நடித்து நடித்து எனக்கே சலிப்பாக உள்ளது. ஹோம்லி ரோல்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார்.
வாமனன் படத்தில் எனது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். கேட்கவே சந்தோஷமாக இருக்கிரது.
இது நிச்சயம் எனக்கு பெரிய பிரேக். ஆனால் இப்படிப்பட்ட பிரேக் முன்பே கிடைத்திருந்தால் எனது நிலையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் கிளாமர் நடிகையாகவே என்னை ஆக்கி விட்டார்கள் என்று புலம்புகிறார் லஷ்மி ராய்.
மலையாளத்தில் நான் கிளாமராக நடிப்பதில்லை. அங்கு எனக்கு நடிக்க அதிக வாய்ப்பு தருகிறார்கள். அதேபோல தமிழிலும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். கிளாமர் கேர்ள் என்ற இமேஜிலிருந்து மாறி ஹோம்லி ரோல்களுக்கு ஆர்வமாக உள்ளேன் என்கிறார் லஷ்மி ராய்.
ஹோம்லிக்கு மாறுமாறு எங்கிருந்தாவது உத்தரவு வந்ததா மேடேம்...?


Click it and Unblock the Notifications