சோனாவுக்கு லைட்மேன்கள் கொடுத்த ஷாக்!

By Staff

Sona
சொந்தப்படம் தயாரிக்க ஆரம்பித்துள்ள நடிகை சோனாவுக்கு படப்பிடிப்பு ஆரம்பித்த சில தினங்களிலேயே ஷாக் கொடுத்துவிட்டார்கள் லைட்மேன்கள்.

சமீபத்தில் பாக்யராஜ் பெயரில் தலைப்பு வைத்து ஒரு படத்தைத் துவங்கினார் சோனா.

ஆனால் படப்பிடிப்பு மட்டும் இரவில் அதுவும் 10 மணிக்குப் பிறகுதான் நடக்கும். அதிகாலை 5 மணி வரை தொடரும் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்கும் ஊழியர்கள் ஆரம்பத்திலிருந்தே புலம்பி வந்தனர்.

பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் படப்பிடிப்பை நடத்தினால் இரட்டை சம்பளம் தரவேண்டுமாம். ஆனால் சோனாவோ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இரவு முழுக்க வேலை செய்துவிட்டு, சாதாரண சம்பளம் பெற முடியாது என முடிவெடுத்த லைட்மேன்கள் திடுதிப்பென்று ஸ்ட்ரைக்கில் இறங்கினர்.

சென்னை இந்திரா நகரில் ஷூட்டிங் நடந்தபோது படப்பிடிப்பைத் தொடர முடியாது என பளிச்சென்று சொல்லிவிட, அன்றைய ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

இதில் டென்ஷனான சோனா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் முறையிட்டுள்ளார். பஞ்சாயத்து நடக்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X