காதலருடன் மதுமிதா நிச்சயதார்த்தம்!

ஆந்திர அழகி மதுமிதா, ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார். பிறகு பார்த்திபன் ஜோடியாக 'குடைக்குள் மழை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து அமுதே, இங்கிலீஷ்காரன், நாளை, அறை எண் 305-ல் கடவுள் படங்களில் நடித்தார். இப்போது யோகி, சொல்ல சொல்ல இனிக்கும், நல்வரவு, காதல் மெய்ப்பட... போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் தெலுங்கு ஹீரோ சிவபாலாஜிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்திலுள்ள கோல்கொண்டா ஹோட்டலில் நடைபெற்றது.
இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபாலாஜி, தமிழில் சத்யராஜ் நடித்த 'இங்கிலீஷ்காரன்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடி மதுமிதா. அப்போது முதல் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
காதல், திருமணம் மற்றும் நிச்சதார்த்தம் குறித்து, மதுமிதா கூறியதாவது:
இது காதல் திருமணம் மட்டும் அல்ல. இருவீட்டுப் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும் திருமணம்.
என் நீண்ட நாள் நண்பரை மணக்கிறேன். இப்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. திருமண தேதி முடிவாகவில்லை. தமிழில் நான் நடிக்கும் படங்களை முடித்த பிறகு திருமணம் நடக்கும். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடருவேன்... என்றார் மதுமிதா.
வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











