'அம்மா' ஆனார் சினேகா!

மோகன்லாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள சினேகா, அந்தப் படத்தில் நடிக்கும் நாடோடிகள் புகழ் அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.
மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாளத்தின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லையாம். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு.
ஷிகார் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக சினேகாவும் மகளாக நாடோடிகள் புகழ் அனன்யாவும் நடிக்கிறார்கள். அனன்யாவுக்கு அம்மா என்றதும் சற்றுத் தயங்கிய சினேகாவுக்கு, அந்த கேரக்டரின் தன்மையைச் சொன்னதும் பிடித்துப் போய் ஓகே சொல்லிவிட்டாராம். இந்தப் படம் தனது கேரியரில் முக்கிய இடம் பிடிக்கும் என்கிறார் சினேகா.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி ராய். அவர் திடீரென்று நீக்கப்பட்ட பிறகுதான் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்னொரு செய்தி, அனன்யாவை தமிழில் அறிமுகப்படுத்திய சமுத்திரக்கனிதான், இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











