சிம்புவை 'பிக்கப்' செய்த மீனாட்சி!

வாலிபன் என்று தலைப்பு வைத்துவிட்டு, சும்மா இருக்க முடியுமா... சேட்டைகளுக்கேற்ற ஒரு ஜோடி வேண்டுமே எனத் தேடிக் கொண்டிருந்தபோது, மீனாட்சியின் குத்தாட்டத்தைப் பார்த்திருக்கிறார் ஒரு வீடியோவில்.
ஆஹா நம்மை சேட்டைக்கு சரியான வேட்டை என முடிவு செய்து தனது அடிப்பொடிகளிடம் காதைக் கடித்தாராம். அது எப்படியோ பல மைல் தூரம் தள்ளி இருந்த மீனாட்சிக்கு காற்றுவாக்கில் போய்விட்டதாம்.
அவ்வளவுதான், உற்சாகத்தில் துள்ளிய மீனாட்சி, அடுத்த சில மணி நேரங்களில் சிம்புவின் முன்னால் ஆஜராகி தன் அருமை பெருமைகளையெல்லாம் ஒரு 'லைவ் டெமோவாகவே' காட்டிவிட்டாராம்.
அப்புறமென்ன... 'இந்த வாலிபனுக்கு ஜோடி நீதான்... நிம்மதியா போய்ட்டு வாம்மா' என்று உறுதியளிக்க, பார்ப்போரிடமெல்லாம், "வழக்கமா பசங்கதான் பொண்ணுங்களை பிக்கப் பண்ணுவாங்க... ஆனா நான் ஹீரோவையே பிக்கப் பண்ணிட்டேனே..." என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லி மகிழ்கிறாராம் அம்மணி.
இதில் ஹைலைட்... இவரைப் போல இன்னும் இரு 'மீனாட்சிகள்' இந்த வாலிபனை பின்னிப் பிணைந்து டூயட் பாடவிருப்பது அம்மணிக்கு இன்னும் தெரியாதாம்!


Click it and Unblock the Notifications











