ரவுடியைத் திருத்தும் மேகா

By Staff

Megha Nair
தங்கம் நாயகி மேகா நாயர் இப்போது பெரிதும் எதிர்பார்த்திருக்கும் படம் பூவா தலையா. காரணம் அது மட்டுமே சேச்சி கையி்ல் உள்ள படம்.

பசுபதி மே.பா. ராசக்காபாளையத்தில் முண்டோடு வந்து ரசிகர்களை திண்டாட வைத்த மேகா நாயர், தனி நாயகியாக சத்யராஜுடன் இணைந்து தங்கம் படத்தில் நடித்தார்.

தங்கம் படத்திற்குப் பின்னர் தங்கமான வாய்ப்புகள் நிறைய வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனாலும் வந்ததென்னவோ பூவா தலையா படம் மட்டுமே.

தூத்துக்குடி படத்தின் இயக்குநர் சஞ்சய் ராம் இயக்கி வரும் பூவா தலையா படத்தில் தனி நாயகியாக மேகா நாயர் நடித்துள்ளார். படத்தில் சேச்சிக்கு தாசி வேடமாம்.

விலைமாதுவாக இருக்கும் நாயகிக்கு ஒரு ரவுடி மீது காதல் பிறக்கிறது. அந்தக் காதலுக்கு இடையூறாக நாயகனின் ரவுடித்தனம் இருப்பதால் அவனைத் திருத்தி நல் வழிக்குத் திருப்புகிற நாயகி வேடமாம் மேகா நாயருக்கு.

படத்தில் கவர்ச்சியோடு நடிப்பையும் திறம்பட கொடுத்துள்ளாராம். என்னை நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். எனவே இந்தப் படம் எனக்கு பெரிய பிரேக் தரும் என்று நம்புகிறேன் என்கிறார் மேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X