மேக்னா... எப்போ கல்யாணம்?

இப்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த வுட்டிலும் மேக்னாவுக்கு வாய்ப்புகள் பெரிதாக இல்லை. எனவே மாடலிங், பேஷன், டாக் ஷோக்கள் என போய்க்கொண்டிருக்கிறது. இநத நிலையில் அவருக்கும் குஷால் என்ற பஞ்சாபி இளைஞருக்கும் இடையே ஆரம்பித்த நட்பு காதலாகி, இப்போது கல்யாணத்தில் வந்து நிற்கிறதாம்.
"ஆமாம்... நானும் குஷாலும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். இருவருக்கும் ஆருமாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டது. ஆனால் கல்யாணம் எப்போது என்று தேதி முடிவு செய்யக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இன்னொன்று நிச்சயதார்த்தம், கல்யாணம் போன்றவை எனது தனிப்பட்ட விஷயங்கள் என்பதால் அதைப் பற்றி பெரிசாக வெளியில் நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை", என்றார்.
Comments


Click it and Unblock the Notifications