அழகிய ராட்சசி மும்தாஜ்!

By Staff

Mumtaj
மும்தாஜ் இதுவரை காட்டியிராத கவர்ச்சிக் காட்சிகள் நிறைந்த படம் என்று பெருமையுடன் கூறுகிறார்கள் மைலா படத்தின் இயக்குநர்களான ரவி-ராஜா.

முற்றிலும் பட வாய்ப்புகள் குறைந்து போய் டிவி டான்ஸ் ஷோவில் நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மும்தாஜ், நடித்து வரும் படம்தான் மைலா. எப்போது இந்தப் படத்தை ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் வரப் போவதாக கூறுகிறார்கள் இதை இயக்கியுள்ள ரவி, ராஜா இரட்டையர்.

படம் முழுக்க மும்தாஜின் அட்டகாசம்தானாம். இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் முழு உழைப்பைக் காட்டியிருக்கிறாறாம். படத்தின் கதை என்னவோ என்று கேட்டதற்கு இது வித்தியாசமான கதை என்ற இயக்குநர் இரட்டையர்கள், இதில் வேற்று கிரகத்துப் பெண்ணாக வருகிறார் மும்தாஜ் என்றனர்.

படத்தில் மும்தாஜுக்கு அழகிய ராட்சசி என்ற பெயராம். மும்தாஜை மட்டுமே முக்கியமாக நம்பி எடுத்துள்ள படம் என்று கூறும் ரவி, ராஜா, படம் இளைஞர்களை கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

கடைசி வரை படத்தின் கதையையும், ஹீரோ யார் என்ற விவரத்தையும் ரவியும், ராஜாவும் தெரிவிக்கவே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X