யாரிடமும் வாய்ப்பு கேட்க மாட்டேன்-நவ்யா

தமிழில் நவ்யா இப்போது நடித்து முடித்துள்ள படம் 'ஓ ரசிக்கும் சீமானே'. சேரனின் ஆட்டோகிராப்-2 படத்திலும் இவருக்கு ஒரு வேடத்தை ரிசர்வ் செய்து வைத்துள்ளாராம் சேரன்.
தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளிலும் நவ்யா நடித்துக் கொண்டுதானிருக்கிறார்.
அவர் கூறுகையில்,
கன்னடத்தில் கடந்த ஆண்டு நான் நடித்த கஜா நன்றாக ஓடியது. இதைத் தொடர்ந்து சிவராஜ்குமார், தர்ஷன் மற்றும் விஷ்ணுவர்தன் படங்களில் நடிக்கிறேன்.
கன்னடத்தில் இந்தளவு பிசி நடிகையாவேன் என நினைக்கவில்லை.
தெலுங்கில் சுனில் குமார் தேசாயின் படத்தில் நடிக்க உள்ளேன். மற்ற மொழிகளில் நடிப்பதால் மலையாளத்தில் நடிக்க மறுப்பதாகச் சொல்வது தவறு. மலையாளத்தில் தொடர்ந்து கால்ஷீட் தேதிகளை கேட்கிறார்கள். அதனால் நடிக்க முடியவில்லை.
சினிமாவில் நடிக்க வந்தது, திடீரென நடந்ததுதான். எதையும் நான் திட்டமிடுவதில்லை. பட வாய்ப்பே இல்லாமல் வீட்டில் அமர வேண்டிய சூழல் வந்தாலும் அதற்காக கவலைப்பட மாட்டேன். ஆனால் யாரிடமும் வாய்ப்புக் கேட்டுப் போகமாட்டேன்.
இப்போது எம்பிஏ படித்து வருகிறேன். தேர்வுகள் நெருங்கிவிட்டால் எந்தப் படமும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றார் நவ்யா.


Click it and Unblock the Notifications











