லிங்குசாமி புகார்: நயனுக்கு ரெட்?

By Staff

Nayanatara
பையா பட விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான லிங்குசாமி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் நடிகை நயனதாராவுக்கு ரெட் கார்டு தடை விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.

லிங்குசாமி தயாரித்து இயக்கும் படம் பையா. கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக நயனதாரா ஒப்பந்தமானார். இப்படத்துக்காக ரூ. 1கோடியே 25 லட்சம் அவருக்கு சம்பளமாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ரூ. 25லட்சத்தை அட்வான்சாக அவருக்கு வழங்கப்பட்டதாக லிஙஅகுசாமி கூறியிருந்தார். நயனதாராவும் இதை மறுக்கவில்லை. இப் படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அப்பட ஷூட்டிங் முடியாததால் பையா பட ஷூட்டிங் தள்ளிப்போனது.

தனது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாகவும் இனி அப்படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் நயனதாரா கூறினார். இதையடுத்து படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக தமன்னா ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார்.

படத்திலிருந்து விலகியதால் அட்வான்ஸ் பணம் ரூ. 25 லட்சத்தை திருப்பி தருமாறு நயன்தாராவிடம் லிங்குசாமி கேட்டார். எனது கால்ஷீட்டை வீணடித்ததால் அதை திருப்பி தர முடியாது என நயனதாரா கூறிவிட்டாராம். இதனால் நயன்தாரா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் அளித்துள்ளார்.

பையா படத்தில் நடிக்கவே அட்வான்சாக ரூ. 25 லட்சத்தை நயனதாரா பெற்றிருக்கிறார். பணத்தை திருப்பி தரா விட்டால் அப்படத்தில் அவர் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் முடிவு கூறியுள்ளது. பணத்தையும் திருப்பி தராமல் பையா படத்திலும் நடிக்க மறுத்தால் நயனதாராவுக்கு மற்ற மொழி படங்களிலும் நடிக்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு படத்திலும், மலையாளத்தில் திலீப் ஜோடியாக பாடிகாட் படத்திலும் நயனதாரா நடித்து வருகிறார். பையாவுக்கு கொடுத்த தேதிகளைத்தான் இந்தப் படங்களுக்கும் அவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X