ருக்மணியின் 'கனா'!

By Staff

Rukmani
பொம்மலாட்டத்தில் தனது நடிப்பாலும், நடனத்தாலும் அசர வைத்த ருக்மணி, ஆனந்த தாண்டவத்திலும் அசத்தியுள்ளார்.

காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ஆனந்த தாண்டவம். படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இப்படத்தில் நடித்திருக்கும் ருக்மணி மீது எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

முதல் படத்திலேயே பாரதிராஜாவால் குட்டுப்பட்டவர் ருக்மணி. பொம்மலாட்டம் படத்தில் நடனத்தால் அசத்தியவர் ருக்மணி. நடிப்பிலும் கலக்கியிருந்தார்.

இந்த நிலையில் ஆனந்த தாண்டவத்திலும் அவருக்கேற்றார் போல ஒரு பாடல் காட்சியை வைத்துள்ளாராம் இயக்குநர் காந்தி கிருஷ்ணா.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணாக இதில் வருகிறார் ருக்மணி. இப்படத்தில் இடம் பெறும் கனா கண்டேன் பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்கிறார் காந்தி கிருஷ்ணா.

காரணம், இப்பாடலில் ருக்மணி பிரமாதமாக ஆடியுள்ளாராம். அதை விட பிரமாதமாக பாடியுள்ளாராம் நித்யஸ்ரீ மகாதேவன்.

ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்ற கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்குப் பின்னர் நித்யஸ்ரீக்கு இப்பாடல் பெரும் பெயர் பெற்றுத் தரும் என்பது காந்தி கிருஷ்ணாவின் எதிர்பார்ப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X