ரசிகர்கள் கலவரம், தீ வைப்பு... காரில் ஏறி தப்பித்த சமீரா!

வாரணம் ஆயிரம், அசல், விரைவில் வரவிருக்கும் நடுநிசி நாய்கள் படங்களின் நாயகி சமீரா ரெட்டி. இவர் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.
மைதானத்துக்குள் பொதுமக்கள் கட்டணம் மற்றும் அனுமதி சீட்டுகள் இன்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.
நிகழ்ச்சியில் ரவிகிஷன், மனோஜ் உள்ளிட்ட போஜ்புரி நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். விழா துவங்கியதும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட னர். அது கலவரமாக பரவியது.
நாற்காலிகளைத் தூக்கி வீசி உடைத்தனர். மேடையே நோக்கி கற்கள் சரமாரியாக வீசப்பட்டது. இதில் மேடையில் ஆடிக்கொண்டி ருந்த நடனக் கலைஞர்கள் சிலர் காயமடைந்தனர்.
அப்போது மைதானத்தின் ஒரு பகுதியில் தீ வைத்துவிட்டனர் சில ரசிகர்கள்.
உடனே நடிகர், நடிகைகள் அங்கு மிங்கும் அலறியடித்து ஓடினார்கள். ரசிகர்களின் கண்ணில் படாமல் ஒளிந்தபடி சமீராரெட்டி ஒரு காரில் ஏறி தப்பித்தார்.
கலவரம் பற்றி அவர் கூறுகையில், "இந்த கலவரத்தை நான் எதிர்பார்க்கவில்லை. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. விழாக் குழுவினர் என்னை அவசரமாக கிளப்பி காரில் ஏற்றினர். அப்போது அந்த காரிலும் கற்களை வீசினார்கள். நான் பின் சீட்டில் தலையை குனிந்தேன். காரில் படுத்து ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பினேன். என் வாழ்க்கையிலேயே மிக மோசமான அனுபவம் இதுதான்", என்றார்.


Click it and Unblock the Notifications











