சந்தியாவின் மொழிப் பாசம்!

பள்ளிக் கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்த சாதாரண மாணவியான சந்தியா, காதல் மூலம் ஓவர்நைட்டில் ஸ்டார் ஆனவர். அந்தப் படம் கொடுத்த ஏற்றத்தால் தமிழ் சினிமாவில் சந்தியாவும் ஒரு முக்கிய நாயகியானார். லேட்டஸ்டாக வந்த தூண்டில் படத்தில் வெயிட்டான ரோல். இருந்தாலும் சிரமப்பட்டு நடித்திருந்தார்.
தமிழில் அப்படி இப்படி நடித்துக் கொண்டிருக்கும் சந்தியா, அவ்வப்போது தாய் மொழியான மலையாளத்திற்கும் விசிட் அடிப்பது வழக்கம். அவர் மலையாளத்தில் முதலில் நடித்த படம் ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட். அது சரிப்பட்டு வருவில்லை. ஆனால் லேட்டஸ்டாக நடித்த சைக்கிள், சந்தியாவுக்கு ஹிட் படமாகி விட்டது.
இப்போது கேரளாவில் சந்தியாவை எல்லோரும் சைக்கிள் சந்தியா என்றுதான் செல்லமாக கூப்பிடுகிறார்களாம். அந்த அளவுக்கு சைக்கிள் அங்கு ஹிட் ஆகியுள்ளது.
இதனால் சந்தியாவும் சந்தோஷமாக உள்ளாரார். அத்தோடு நில்லாமல், மலையாளம், மலையாளம்தான் என்று மலையாள சினிமாவை ஒரேயடியாக புகழ்ந்து பேசியும் வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுக்க குறைந்தது ஐந்து மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள். படம் பர்பக்ட் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. மலையாளம்தான் இந்த விஷயத்தில் பக்கா பெர்பக்ட். ஒரே மாதத்தில் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் எடுத்து முடித்து விடுவார்கள். அதேசமயம் முழுமையான படமாகவும் அது இருக்கும் என்று மலையாளத்தைத் தட்டிக் கொடுக்கிறார் சந்தியா.
'சைக்கிள்' கேப்பில் சிந்து பாடுகிறீர்களே சந்தியா, இது சரியா?


Click it and Unblock the Notifications











