தங்கர் படத்தில் சந்தியா

காதல் படம் வெளியான பின்னர் சந்தியா எங்கேயோ போகப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய லெவலுக்குப் போக முடியாமல் தேங்கிப் போய் விட்டார் சந்தியா.
சத்தான கதைகளை தேர்வு செய்யாமல் நடிக்க ஆரம்பித்ததால் சந்தியாவுக்கு மார்க்கெட் இறங்கிப் போனது. இப்போது கிட்டத்தட்ட வீட்டோடு இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சந்தியா.
இந்த நிலையில், வித்தியாசமான கதையமைப்புடன் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சந்தியா ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவருக்கு வித்தியாசமான ஜோடி. அதாவது பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம்.
அதேபோல படத்தின் நாயகனும் வித்தியாசமானவர்தான். அவர் பிரபுதேவா. நடிப்பிலும், நடனத்திலும் கலக்கிய பிரபுதேவா சமீபகாலமாக இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மேக்கப் போடப் போகிறார் பிரபுதேவா.
பிரகாஷ் ராஜ், பிரபுதேவா என வித்தியாமான கலைஞர்களுடன், இன்னும் வித்தியாசமான கோணத்தில் சந்தியாவுடன் களம் இறங்கும் தங்கரின் இந்தப் புதிய படம் இப்போதே கோலிவுட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











