சிம்ரனுக்கு கிராக்கி!

ஒரு காலத்தில் இடையழகியாக, கனவுலக நாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவராக இருந்தார் சிம்ரன். திடீரென கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைக்கு தாயாகி செட்டிலாகியவுடன் நமது ரசிகர்கள் வழக்கம் போல சிம்ரனிடமிருந்து ஷ்ரியா, ஆசின், நயனதாராவுக்கு தாவி விட்டனர்.
குழந்தை பெற்று ஒரு வருடம் கழித்து மறுபடியும் ஸ்லிம் ஆகி கோலிவுட்டுக்குத் திரும்பி வந்தார் சிம்ரன். ஆனால் பழைய காலத்து நினைப்புடா பேராண்டி கணக்காக, அவருக்கு ஹீரோயின் ரோல்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.ஆனால் இளம் ஹீரோக்கள் யாரும் சிக்கவில்லை.
பொறுத்துப் பார்த்து காத்திருந்த சிம்ரன், சரி போனால் போகட்டும் என்று இறங்கி வந்து இப்போது அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களுக்கு மாறியுள்ளார். என்ன ஆச்சரியம், முன்பு வேண்டாம் என்று விலகியவர்கள் எல்லாம் இப்போது சிம்ரனை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.
அதிலும் ஹரியின் இயக்கத்தில் சிம்ரன் நடித்து வரும் சேவல் படத்தில் அவருடைய கேரக்டர் படு சூப்பராக இருப்பதாக டாக் நிலவுவதால் சிம்ரனுக்கு கிராக்கி கூடியுள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ள சிம்ரன், முதல் வேளையாக தனது சம்பளத்தை ஏற்றி விட்டார். இப்போது அவரது ஒரு நாள் கால்ஷீட் ரூ. 1 லட்சமாம். இதுதவிர படத்தின் ஹீரோயினுக்கு இணையாக தானும் ட்ரீட் செய்யப்பட வேண்டும் என்றும் கண்டிஷன் போடுகிறாராம்.
சிம்ரனுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் கிராக்கியில் கலங்கியிருப்பவர் நதியா. அவர்தான் சிம்ரன் வருகைக்கு முன்பு அம்மா வேடங்களில் அசத்திக் கொண்டிருந்தார்.இப்போது அதற்கு போட்டியாக சிம்ரன் வந்திருப்பதால் சற்றே சில்லிட்டுப் போயிருக்கிறாராம் நதியா.


Click it and Unblock the Notifications











