வேண்டாம் அம்மா வேஷம்! - சிலுப்பும் சிம்ரன்

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். ஆனால் திடீரென்று திருமணம் செய்து கொண்டு, இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்து, குழந்தையும் பெற்றுக் கொண்டார். தேடிப்போன தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யாரையும் மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை திரும்பிய சிம்ரன், நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால் அவரை யாரும் சீண்டவில்லை. டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதுவும் எடுபடவில்லை. சேவல், ஐந்தாம்படை என சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும், சிம்ரன் பெரிய அளவில் பேசப்படவில்லை.
தற்போது கைவசம் படங்கள் இலலை. எனவே தயாரிப்பில் இறங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கதை கேட்டு வருகிறார்.
இதுகுறித்து சிம்ரன் கூறுகையில், "நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன ஆனால் எல்லாமே அம்மா வேடங்கள். வாரணம் ஆயிரம் படத்தில் அம்மா வேடத்தில் நடித்தேன். அதற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அந்த படத்தில் அம்மா வேடத்தில் நடித்தேன் என்பதற்காக தொடர்ந்து அதே வேடங்கள் வருகின்றன. நிறைய பேர் அந்த வேடத்தில் நடிக்க அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. அம்மா வேடத்தில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன்...", என்றார்.
இப்போது சிம்ரன், சென்னை கிழக்கு கடற்கரையில் புதிதாக வீடு கட்டி வருகிறார். விரைவில் அங்கேயே குடியேறப்போகிறாராம்.


Click it and Unblock the Notifications