twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிந்து துலானிக்கு கல்யாணம்!

    |

    Sindhu Tolani
    நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட நடிகை சிந்து துலானி, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் சுரேந்தர் ரெட்டியை திருமணம் செய்கிறார். சமீபத்தில் தெலுங்கில் சக்கை போடு போட்ட கிக் படத்தின் இயக்குநர் இவர்.

    சுள்ளான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சிந்து துலானி. மன்மதன், மஜா, பசுபதி மே/பா ராசக்காபாளையம் போன்ற படங்களில் நடித்தார்.

    தெலுங்கில் அத்தனொக்கடே (தமிழில் வெளியான ஆதி) படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கிய போதே இருவரும் நெருங்கிப் பழகி வந்தார்களாம்.

    இப்போது அந்தப் பழக்கம் திருமணத்தில் முடிந்துள்ளது.

    இந்த மாதக் கடைசியில் திருமணம் நடக்கும் என தெரிவித்துள்ள சிந்து துலானி, வரும் வெள்ளிக்கிழமை திருமணத் தேதியை அறிவிக்கிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X