மாப்பிள்ளை தேவை- பெண் ஸ்னேகா!

தனது நிலையிலிருந்து பெரிய அளவில் இறங்காமலேயே தொடர்ந்து கலக்கி வரும் நடிகை ஸ்னேகாதான். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்தார். இருந்தாலும் காலத்தின்போக்கில் போய்த்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தபோது லேசான கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டினார்.
இருந்தாலும் கூட ஸ்னேகா படு ஆபாசமாக நடித்தார் என்று எந்தப் படத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்குத்தான் அவர் நடித்த அத்தனை படங்களும் உள்ளன.
டீசன்ட்டான கேரக்டர்களை பார்த்து பார்த்து நடித்து வரும் ஸ்னேகா, விளம்பரங்களிலும் முடி சூடா ராணியாக விளங்குகிறார்.
தற்போது வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீமேக்கான பவானியில் படு கலக்கலாக அதிரடி வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்னேகா. இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளாராம் அவர். இப்படத்துக்காக மெனக்கெட்டு தனது உடலை டிரிம் செய்துள்ள ஸ்னேகா, சண்டைக் காட்சிகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் தவிர தெலுங்கிலும் நிறையப் படங்களுடன் உள்ள ஸ்னேகாவிடம் தற்போது கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளனவாம்.
இப்படி ஸ்டுடியோ, ஸ்டுடியோவாக ஸ்னேகா பிசியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினரோ நல்ல மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கும் வேலையி்ல் இறங்கியுள்ளனராம்.
நல்ல வரனாக அமைந்தால் திருமணத்தை முடித்து விடுவது என்ற முடிவில் அவர்கள் இருக்கிறார்களாம். ஸ்னேகா இதற்கு தடை சொல்லவில்லை என்று தெரிகிறது. மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருங்கள், கிடைத்தால் சொல்லுங்கள். அதன் பிறகு நிறுத்திக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறாராம்.
பொருத்தமானவர்கள் ராஜாராம் சாருக்கு (அவர் தாங்க ஸ்னேகாவோட அப்பா) அப்ளிகேஷனை தட்டி விடலாம்.


Click it and Unblock the Notifications











