தயாரிப்பாளராகும் ஸ்னேகா

By Staff

Sneha
தமிழ் நடிகைகளில் ரொம்பவே விவரமானவர் ஸ்னேகாதான். பொதுவாக நடித்து சம்பாதிக்கும் பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அந்தப் பட்டியலில் இன்றைக்கு முதலிடம் சிநேகாவுக்குதான்.

ஏற்கெனவே தனது சொந்த ஊரான பண்ருட்டியில் கல்யாண மண்டபம், பண்ணை நிலம் என வாங்கிப் போட்டவர், சென்னை ஆலப்பாக்கத்தில் பெரிய பங்களா கட்டி இப்போதுதான் குடிபோயிருக்கிறார்.

திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிலங்களையும் வாங்கிப் போட்டு வருகிறார் அம்மணி. குறைந்த விலை என்று கூறிக் கொண்டு வருபவர்களின் நிலங்களைப் பற்றி விசாரித்துவிட்டு உடனே அட்வான்ஸ் கொடுத்துவிடுறாராம் ஸ்னேகா.

இப்போது சொந்தமாகப் படக் கம்பெனி ஒன்றையும் தொடங்குகிறார். அவரது சகோதரியை நிர்வாகியாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட உள்ளதாம். ஆரம்பத்தில் படங்களை விநியோகம் செய்யப்போகிறாராம். சில மாதங்களுக்குப் பிறகே படம் தயாரிக்கப் போகிறாராம்.

சொந்தப் படம்தான் என்றாலும், தான் தயாரிக்கும் படங்களில் தானே நடிப்பதை ஸ்னேகா விரும்பவில்லையாம். அதனால் கதைக்குத் தேவையான நடிகை என இயக்குநர் யாரைச் சுட்டிக் காட்டுகிறாரோ அவர்தான் நாயகியாம்.

தனது கம்பெனியின் பெயர் மற்றும் விபரங்களை இன்னும் சில தினங்களில் வெளியிடப் போகிறாராம்.

'சினேக்' படம் எடுத்தால் பயப்படலாம், ஸ்னேகா படம் எடுத்தால் பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X