விஷால் படத்தை மறுத்த தமன்னா

விஷால் அடுத்து நடிக்கவுள்ள படம் தீராத விளையாட்டு பிள்ளை. திரு படத்தை இயக்குகிறார். இதில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். அவர்களில் முதல் ஹீரோயின் ரீமா சென்.
ஏற்கனவே திமிரு, செல்லமே ஆகிய படங்களில் ரீமாவுடன் ஜோடி போட்டுள்ளார் விஷால். இந்த நிலையில் 3வது ஹீரோயினாக நடிக்க தமன்னாவை அணுகியுள்ளனர்.
ஆனால் ஸாரி சொல்லி விட்டாராம் தமன்னா. தனி நாயகி என்றால் பரவாயில்லை. 3 ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி மறுத்து விட்டாராம்.
தற்போது தோரணை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இதில் அவருக்கு ஜோடி ஷ்ரியா. கோடை விடுமுறையில் தோரணை தியேட்டர்களுக்கு வருகிறது.
இதை முடித்து விட்டு தீராத விளையாட்டு பிள்ளைக்கு வருகிறாராம் விஷால்.
Comments
சினிமா தமன்னா தமிழ் தீராத விளையாட்டு பிள்ளை மறுப்பு விஷால் cinema refutes tamanna theeratha vilayaatu pillai vishal


Click it and Unblock the Notifications