ஆகாஷ் மீது நடிகர் சங்கத்தில் தமன்னா புகார்!

எரிந்த கட்சி, எரியாத கட்சி பாணியில் மூவரும் மாற்றி மாற்றி லாவணி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மீண்டும் தமன்னாவின் முறை போலிருக்கிறது!.
மதன் படத்துக்கு ஜெய் ஆகாஷ் எனக்கு அட்வான்ஸாக ரூ.1 லட்சம் கொடுத்ததாகக் கூறுவது அப்பட்டமான பொய் என நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் தமன்னா.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதன் படத்தில் நான் ஒப்பந்தமானது இரண்டரை வருடங்களுக்கு முன். இதில் 20 நாள் நடிக்க வேண்டும் எனக் கூறித்தான் அட்வான்ஸ் தொகையாக ரூ. 50,000 காசோலையை ஜெய் ஆகாஷ் தந்தார்.
ஆனால் அதன் பின் ஷூட்டிங் நடத்தவில்லை. திடீரென ஒருநாள் வந்த ஜெய் ஆகாஷ் மேலும் 20 நாள் கால்ஷீட் தேவை என்றார். ஆனால் அப்போது 4 படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். அத்தனை நாட்கள் கால்ஷீட் தர முடியாது என்றேன்.
பின் அந்த படம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. இப்போது இரண்டரை வருடங்கள் கழித்து படப்பிடிப்பு நடத்துகிறேன். 6 நாள் கால்ஷீட் தந்தால் போதும் என்கிறார். ஹீரோயின் வேடம் என்றுதான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்போது அதை கவுரவ வேடமாக ஜெய் ஆகாஷ் மாற்றப் பார்க்கிறார். அதனால்தான் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டேன்.
இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு ரூ. 1 லட்சம் அட்வான்ஸ் தந்ததாகச் சொல்வதும் பொய். அவர் கொடுத்த்து ரூ.50,000 தான்.
இனி இந்தப் படத்தில் நடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறு என்னுடையதல்ல என்றார் தமன்னா.
ஆகாஷ் மீது சுனேனாவும் நடிகர் சங்கத்தில் புகார் தந்துள்ளார்.
அடுத்த 'பிரஸ்மீட்' எப்போ ஆகாஷ்?


Click it and Unblock the Notifications











