த்ரிஷா பெயரில் போலியான ட்விட்டர் தளம்!

By Sudha

Trisha
ட்விட்டரில் த்ரிஷா பெயரில் போலியாக ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து, அந்த நபர் மீது போலீஸில் புகார் செய்ய முடிவு செய்துள்ளார் நடிகை த்ரிஷா.

ட்விட்டர் இணைய தளத்தில் த்ரிஷா பெயரில் போலியாக யாரோ ஒருவர் முகவரி உருவாக்கி இத்தனை நாளும் ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு வந்தார். த்ரிஷா படங்களுடன், அவரது அதிகாரப்பூர்வ தளம் போலவே அது செயல்பட்டு வந்தது.

அதை உண்மை என்று நம்பியவர்கள் கடிதங்கள் அனுப்பி ஏமாந்தனர். இது பற்றி திரிஷாவுக்கு தகவல் தெரிந்ததும் அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "இணைய தளத்தில் எனது பெயரில் மோசடி நடந்திருப்பது கண்டு அதிர்ந்தேன். ட்விட்டரில் 'த்ரிஷா ட்ரஷர்ஸ்' என்ற முகவரியில் என் கணக்கு உள்ளது.

ஆனால் போலியாக இன்னொரு முகவரியை யாரோ உருவாக்கி மோசடி செய்துள்ளனர்.." என்றார்.

இதுபற்றி போலீசில் புகார் செய்ய த்ரிஷா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா பெயரிலும் இது போன்ற மோசடி நடந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், போலியாக உருவாக்கப்பட்ட ட்விட்டர் தளம், இப்போது த்ரிஷாவின் ஒரிஜினல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X