த்ரிஷாவும் அவங்கம்மாவும்!

அது பாசுமதி அரிசி பிராண்ட் ஒன்றின் விளம்பரம். மதராசப்பட்டினம் புகழ் விஜய் இயக்கியுள்ளார். எந்திரன் கேமராமேன் ரத்னவேலுதான் ஒளிப்பதிவு.
இந்த விளம்பரத்துக்கு ஒரு பிரபல நடிகை மற்றும் அவரது அம்மா இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என இந்த நிறுவனம் கூறியுள்ளது. உடனே விஜய் த்ரிஷாவை அணுகி விஷயத்தைச் சொல்ல உடனே ஒப்புக் கொண்டாராம். த்ரிஷா அம்மா உமாவுக்கும் இதில் ஏக சந்தோஷமாம். அம்மாவுக்கும் மகளுக்கும் கனமான சம்பளமாம் இந்த விளம்பரத்துக்கு.
இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "அம்மாவுடன் இணைந்து இந்த விளம்பரத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதுபற்றி நான் கூறுவதை விட சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் சந்தோஷத்தை வெளிப்படுத்தவே இந்த தகவலை சொல்கிறேன்," என்றார்.
இதே விளம்பரத்தை இந்தியில் ஷர்மிளா தாகூர், அவர் மகள் நடிகை சோஹா அலி கானை வைத்து எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











