'ஆன்ட்டி' ஆனார் வினிதா!

ஓஹோவென ஆரம்பித்துதான் வினிதாவின் கோலிவுட் மார்க்கெட். கட்டபொம்மன், நிலா, மிஸ்டர் மெட்ராஸ், வியட்நாம் காலனி ஆகிய ஹிட் படங்களில் கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகை வினிதா. திறமையான நடிகை என்ற பெயரும் பெற்றவர். கவர்ச்சிகரமாக நடித்ததால் அவருக்கு நல்ல மவுசு இருந்தது.
மார்க்கெட் மங்கிய நேரத்தில், திடீரென ஒரு நாள் விபச்சார வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடி வந்த ஓரிரு வாய்ப்புகளும் ஜகா வாங்கின.
ஒருவழியாக அந்த வழக்கில் இருந்த மீண்ட வினிதா படவாய்ப்புகளுக்காக பகீரதப் பிரயத்தனம் செய்தும் பிரயோஜனப்படவில்லை. இந்நிலையில் அவருக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
'எங்க ராசி நல்ல ராசி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மறுபிரவேசம் செய்துள்ளார்.
எங்க ராசி நல்ல ராசி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு இரண்டாவது மனைவியாக நடிக்க வினிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் ஜிஆர் என்ற ஜி.ராமச்சந்திரனின் ஜிஆர் கோல்டு பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதில் ஜிஆர் மகன் விஸ்வா இளம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
இதற்கு முன் 'மனு நீதி', 'சவுண்டு பார்ட்டி', 'காசு இருக்கணும்' ஆகிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்தை இயக்குநர் ரவிராஜா இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











