சிலந்தி ஷூட்டிங்கில் சில்மிஷம்!

அழகி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மோனிகா, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தார். சிறுமியாக இருந்து ஹீரோயினாக மாறிய மோனிகா, சிலந்தி படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில் படு கவர்ச்சியாக நடிக்கிறார். இவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்களைப் பார்க்கும் போது படத்தில் எப்படியெல்லாம் கிளாமர் காட்டியுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மோனிகாவுக்கு ஜோடியாக முன்னா இப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படமாக்கினார்கள். அது ஒரு முதலிரவுக் காட்சி. ஹோட்டல் ஒன்றின் அறையில்தான் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது.
கொஞ்சம் கிளாமரான காட்சி என்பதால் இயக்குநர் உள்ளிட்ட சிலர் மட்டுமே ஸ்பாட்டில் இருந்தனர். படப்பிடிப்பின்போது இயக்குநர் சொன்னதை விட கூடுதலாக நடந்து கொண்டாராம் முன்னா.
அதாவது படுக்கையில் படுத்திருந்த மோனிகாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி குறும்பு செய்துள்ளார். இதனால் கடுப்பான மோனிகா, காச் மூச் என்று கத்தினார்.
எதற்கும் ஒரு எல்லை உண்டு. இப்படியெல்லாமா நடப்பது என்று கோபமாக கேட்டுள்ளார். அதற்கு முன்னா, தத்ரூபமாக இருக்கட்டுமே என்பதற்காகத்தான் இப்படிச் செய்தேன் என்று கூறியுள்ளார். இன்னும் கோபம் அதிகமான மோனிகா, அப்படியானால் கிணற்றில் குதிப்பது போன்ற காட்சியில் நிஜமாகவே குதித்து விடுவீர்களா என்று கேட்டுள்ளார்.
பின்னர் இருவரையும் சமரசப்படுத்தி அந்தக் காட்சியை எடுத்து முடித்தார்களாம்.
முன்னா, இது 'நன்னா' இல்லையே!


Click it and Unblock the Notifications











