3 முறை கூப்பிட்டார் மேனன்-சமந்தா

பாணா காத்தாடியில் தனி நாயகியாக அழகு காட்டியிருப்பவர் சமந்தா. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்குப் பதிப்பில் சமந்தாதான், ஜெஸ்ஸி வேடத்தில் மெஸ்மரைஸ் செய்தவர்.
தமிழில் திரிஷாவுக்குக் கிடைத்த பெயரும், புகழும், தெலுங்கில் தற்போது ஜெஸ்ஸி கேரக்டர் மூலம் சமந்தாவுக்கும் கிடைத்துள்ளது. ரசிகர்கள் எங்கு போனாலும் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்றே கூப்பிடுகிறார்களாம். எல்லாப் புகழும் மேனனுக்கே என்று நன்றி கூறுகிறார் சமந்தா.
சரி வாய்ப்பு வந்தது எப்படி என்று கேட்டபோது, நான் கெளதம் மேனனின் ரசிகை. அவரது அலுவலகத்திலிருந்து மூன்று முறை கூப்பிட்டு விட்டார்கள். நானும் ரசிகை என்ற முறையில் போனேன். அங்கு போன பிறகுதான் விண்ணைத் தாண்டி வருவாயா படக் கதையைக் கூறி நடிக்கிறாயா என்று கேட்டார் மேனன். கசக்குமா என்ன, உடனே ஒத்துக் கொண்டேன் என்கிறார் புன்னகையுடன்.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் சமந்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனராம். ஆனாலும் சமந்தா நடித்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டு பின்னர் தொடர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டனராம்.
இடையில் மங்காத்தா படத்தில் நடிக்க வைக்க சமந்தாவைத்தான் கெளதம் மேனன் பிக்ஸ் செய்து வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் மேனனையே அப்படத்திலிருந்து தூக்கி விட்டதால், கூடவே சமந்தாவையும் அப்புறப்படுத்திக் கொண்டு போய் விட்டார் மேனன்.
இப்போதைக்கு தெலுங்கிலேயே செட்டிலாகி முடிவு செய்துள்ளாராம் சமந்தா. இப்போது தெலுங்கில்தான் நிறைய கதை கேட்டு வருகிறேன். சமர்த்தாக அங்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதையா இருந்தா சொல்லுங்க தமிழிலும் நடிக்கிறேன் என்கிறார் விவரப் பிள்ளையாக.
சமத்துதான் !


Click it and Unblock the Notifications











